வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆரச்சிகட்டு - போகஹவெட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்தப் பெண் கடந்த 28 ஆம் திகதி சிலாபம் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த போது வெள்ளை வேனில் வந்த நபர் ஒருவர் தன்னை பலாத்காரமாக கடத்திச் சென்று பண்டாரவத்த பகுதியில் உள்ள அவருடைய விடுதியில் வைத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் குறித்தப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் குறித்தப் பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment