சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு - படம்

 சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி சீனாவில் உள்ள பென்யாங் நகர நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிருடன் மீட்டனர்.

அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும். உயிருக்கு ஆபத்து உண்டாகும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ளூர் மருத்துவ மனையில் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :