அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடைய அக்காள் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி, உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு மருத்துவரிடம் குழந்தையை காட்டிவிட்டு மருந்து சீட்டு வாங்கினார். பின்னர் மருந்து வாங்கும் பகுதிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென்று அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை எதிர்பாராத அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கத்தினார்.
இதைப் பார்த்து திகைத்து நின்ற, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதைப் பார்த்து திகைத்து நின்ற, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வே.புலியூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 19) என்பது தெரிய வந்தது.

0 comments :
Post a Comment