வாஸ் மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் பேரில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிர­பல கோடீஸ்­வரர் சியாம் கொலைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் பேரில் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சானி அபேசேகர உள்ளிட்ட நால்வரை திட்டி அச்சுறுத்துய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலிணி கமகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று (26) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்­­றம்­சாட்­டப்­பட்­டு கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வேளை மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­க­து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :