கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப்சம்சுதீனின் முயற்சியினால் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (சீடா) அனுசரனையுடன் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் “வாழ்வின் ஒளி ” செயற்திட்டத்தின்கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 17.08.2013 மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல்,கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு காமினி தென்னக்கோன் மற்றும்கல்முனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை பொறுப்பதிகாரி எம்.எம்.முனவ்வர் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
.jpg)
0 comments :
Post a Comment