மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகள் கலைப்பு.


த்திய மற்றும் வட மேல் மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதும், நாளை குறித்த இரண்டு மாகாண சபைகளையும் கலைக்கப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகின்றது.

எவ்வாறாயினும், வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் நடவடிக்கைகள் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதற்கு அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயல் கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் அல்லது 21ஆம் திகதி அன்று இடம்பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைய மாகாண சபை கலைக்கப்பட்டு ஒரு வாரத்தினுள் வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்படும்.

அதன்படி இரண்டு வாரத்திற்குப் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்படும்.

இதேவேளை, அஞ்சல் மூலமான வாக்குப் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கான ஆவணங்களை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :