கிழக்குமாகாண ஆளுநரிடம் இருந்து அதிகாரங்களைக்களைய வேண்டும்-நேற்றைய சந்திப்பில்.


கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்திறன் இல்லாதவராக காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும் ஆளுநர், அதிகாரிகளை பயறுத்தி வருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சர்களை மதித்து செயற்படுவதில்லை கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டமொன்றின் போது விளக்கமளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது . அமைச்சர்களான சுசில் பிறேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் .இக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அஹமட், உட்பட கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்

இதனையடுத்து, கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அபிவிருத்திப் பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு பற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் .ஏ. மஜீத் ஏற்கனவே தெரிவித்துள்ள தகவலில் முதலமைச்சர் என்ற வகையில் நான், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகச் செயற்படவில்லை.

 அவர்களுக்குரிய இடத்தினை வழங்கி வருகின்றேன். ஒரு சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் ஆளுநரின் தலையீடுகள் உள்ளன. இதன் காரணமாக அவைகளை முன்னெடுக்க முடிவதில்லை. என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

ஒரு சில தீர்மானங்கள் ஆளுநரின் அனுமதி கிடைக்காமையினால் நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்படுவதுண்டு. அல்லது நிராகரிக்கப்படுவதும் உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் தங்களது கட்சிக்கு அநீதியிழைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :