
இணையதளங்கள் தொடர்பில் சட்டக் கோவை ஒன்றை தயாரித்துவருவதாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார் .அவர் தெரிவித்துள்ள தகவலில் ,
”இதுவரை 67 இணையதளங்கள் மட்டுமே ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இணையதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித சட்டங்களும் இலங்கையில் இல்லை. பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத இணையதளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும்போது அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே இன்றுள்ளது.
சமூகத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பது அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் இருந்து இயக்கப்படும் இணையதளங்களை தடை செய்தாலும் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையதளங்களை எம்மால் தடை செய்ய முடியாது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இணையதளங்களுக்காக புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற அதேநேரம் பதிவு செய்யப்படாத இணையதங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொட
ர்பிலும் கவனம் செலுத்தப்படும். என்றும் தெரிவித்துள்ளார் .
0 comments :
Post a Comment