பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபயவை கொலைசெய்ய முயன்ற ஆறுபேருக்கு விளக்கமறியல்.

குண்டொன்றை வெடிக்க வைத்து பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் 6 பேரையும் கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்ணிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் உரிய பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் சந்தேகநபர்களை நீதவான் ஜூன் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :