அகலமான பாலமாக அமைத்துத்தர வேண்டும்-சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பழைய வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியில்; அமைக்கப்பட்ட ஒடுக்கமான பாலத்தை விசாலப்படுத்தி மிக அகலமான பாலமாக அமைத்துத்தர வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பாலம் சுமார் 50 வருட காலத்திற்கு முன் மிக சிறியதாக அமைப்பட்ட இப்பாலத்தின் ஊடாக ஒரு தடவையில் ஒரு வேன் போகக்கூடிய வகையில் அமைந்து காணப்படுகின்ற இப்பாலத்தை விசாலப்படுத்தி ஒரே தடவையில் இரு வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக்கூடியவாறு திருத்தி அமைத்துத்தர வேண்டும். 

என இப்பிரதேச மக்களால் பல தடவைகள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் கூட உயரதிகாரிகள் இக்கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ள இச்செயலானது ஒரு மனவேதனையைத் தரும் செயல் என இப்பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இக் குறுகிய அகலமுடைய பாலத்தினூடாக பெரிய லாரிகள் போக்கு வரத்துச் செய்ய முடியாது இருப்பதுடன் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம், அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச வைத்தியசாலைகளின் மருந்து விநியோக சாலை, ஸ்ரீலங்கா இளைஞர் பயிற்சி நிலையம், பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம், வைத்தியசாலை வீதி, தபாலகம் என்பன போன்ற அரச அலுவலகங்களுக்கு இப்பாலத்தினூடாகவே செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இவ்வாறான முக்கியத்துவம் உள்ள இப்பாலத்தை அகலமாக்குவதற்கு திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :