
நவகத்தேகம நவோதய பாடசாலையில் மாகாணசபை உறுப்பினரொருவரால் முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியையான சுசீலா ஹேரத், அவரது வேண்டுகோளை அடுத்து உடனடியாகச் அமுலுக்குவரும் வகையில் மஹஉஸ்வெலவிலுள்ள ரத்னபால வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என மிரர் செய்தி வெளியிடுள்ளது.
குறித்த சம்பவத்தின் காரணமாக தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம், உடல்சார் அலைக்கழிப்பு, மனக்குழப்பம் மற்றும் பயம் காரணமாக தனக்கு இடமாற்ற அனுமதியை வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை கல்வித் திணைக்களத்திற்கு முன்வைத்திருந்தார்.
பட்டதாரியான அவர் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பித்து வருகிறார். அவரது வழிகாட்டலின் கீழ் 88 வீதமான அவரது மாணவர்கள் சிங்கள மொழிப் பாடத்தில் சித்தி பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment