ஜெயலலிதாக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் உயர் நீதுமன்றில் மனு-கிருஷ்ணன்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மூத்த சட்டத்தரணி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த சட்டத்தரணி பி.ஆர்.கிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய பாராளுமன்ற அமைப்பை சீராய்வு செய்ய வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். தற்போது உள்ள சட்டம் தென் மாநிலங்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் உள்ளது.

அரசியல் சட்டத்தில் மறு ஆய்வு செய்ய புதிய கமிஷன் அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா திறமையானர். அவர் அடுத்த பிரதமராக தேர்வு பரிசீலிக்க வேண்டும். எனது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு மனு கொடுத்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றம் இதில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டது. உடனே வக்கீல் பி.ஆர்.கிருஷ்ணன் தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் முன் ஆஜராகி, எனது வழக்கை பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு அனுப்ப பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :