இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் சூதாட்டப்பெண்ணுடன் உல்லாசம்.

2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரொன்றின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் காணப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாக இலங்கைக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்திரஜித் சிங் பிந்த்ரா தெரிவித்த கருத்துக்களை ஆமோதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருபவருமான ஒருவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் போது சூதாடிகளுடன் தொடர்புகளைக் கொண்ட பெண்ணுடன் இரவொன்றைக் கழித்ததாக பஞ்சாப் கிரிக்கெட் சபைத் தலைவர் இந்திரஜித் சிங் பிந்த்ரா அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

குறித்த சம்பவத்தை இந்தியக் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக் கிரிக்கெட் சபை மறைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தை இலங்கைக் கிரிக்கெட் சபை முழுமையாக மறுத்திருந்ததோடு, இந்தியக் கிரிக்கெட் சபையும் மறுத்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள திலங்க சுமதிபால, அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது உண்மையானது எனவும், அந்த விடயம் இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளாலும் மறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்விடயத்தை நாடாளுமன்றம்வரை கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :