பிக்குகளுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை தடை செய்ய வேண்டாம்-விமலவன்ஸ தேரர்


பிக்குகளுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுவொன்றை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வஷ்கடுவ ஷாக்கியமுனி விகாரையின் தலைமை பிக்கு பரகொட விமலவன்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

´பிக்குகள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று புத்த பகவான் எந்தத் தடையையும் விதிக்கவில்லை´ என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்றைய நாடுகளில் பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதாகவும் இலங்கையில் பிக்குகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காமலிருக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் விமலவன்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்று அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தார்.

ஆனால் இந்த ஆட்சேபத்தை நிராகரித்த நீதிமன்றம் மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதியளித்ததாக விமலவன்ஸ தேரர் தெரிவித்தார்.

´வீதிக்கு சென்றால் பஸ் நிறுத்துவதில்லை. பஸ்ஸில் ஏறினால் சீட் கிடைப்பதில்லை. இப்படியான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வேண்டும் என்கிறோம்´ என்றார் பரகொட விமலவன்ஸ தேரர்.

´கௌதம புத்தர் இன்று இருந்தால் அவரும் எமது வேண்டுகோளை ஆதரிப்பார்´ என்றும் அவர் கூறினார். அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 22-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :