மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் இன்று காத்தான்குடியில்.

றிஸ்கான் முகம்மட்

முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காத்தான்குடியில் வைத்து கைச்சாத்திட்டப்பட்டது.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஹிறா பவுண்டேசன் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்நதம் கைச்சாத்திட்ட நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மோகன்லால் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றஹ்களின் தலைவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சஊதி அரேபியா மன்னரின் சார்பில் அஷ்ஷெய்க் யஹ்யா பின் அப்துல் அஸிஸ், மற்றும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் மசூர் மௌலானா உட்பட அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :