
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களைக்கொடுத்து இன்னும் எங்களை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்கிறார் அரசியல் விமர்சகர் எழுத்தாளர் ரம்ஷான் மக்சூத் அவர்கள்.
அவர் இம்போட் மிரர் இணையத்துக்கு வழங்கிய அறியினை அப்படியோ இங்குதருகிறோம்.
தமிழ் மக்களே உங்கள் போராட்டத்தின் நியாயங்களும், அதற்கான தர்க்கரீதியான காரணங்களும் உங்களை பொறுத்த வரை நியாயமாக இருக்கலாம். அதற்காக நீங்கள் பல வழிகளிலும் பல முயற்சிகளை செய்யலாம். அதை பற்றி எமக்கு கவலையில்லை. நாம் ஐக்கிய இலங்கை என்ற பதத்தின் கீழ் ஒன்றுபடவே விரும்புகிறோம். இந்த நாட்டின் யாப்பு சட்டங்களை மதித்து வாழவே விரும்புகிறோம்.
இந்த நாட்டின் இறைமையில் கை வைக்க நாம் ஒரு போதும் துணிந்தது கிடையாது. அதற்காக உங்கள் பிரச்சனைகளிற்கு எதிரான ஒரு சக்தியாக நாம் ஒரு போதும் எழுந்து நிற்கவும் போவதில்லை.
உங்கள் போராட்டங்களிற்கு தடையாகவும் இருக்க போவதில்லை. அது எம்மை பாதிக்காத வரை. எமக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் இரண்டு பேரினவாத அழுத்தங்களிற்கு மத்தியில் வாழும் மக்கள்.
யாருடனும் முரண்பாட்டு அரசியலை கைக்கொள்ள நாம் தயாரில்லை. அதே வேளை தீமைக்கு துணை போகவும் நாம் தயாரில்லை.
ஜெனீவாவில் நாம் எமக்கு நடந்த அநியாயங்களை எடுத்துரைத்தோம். அவ்வளவுதான். அதை நாம் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டோம். புலிகளின் கொலை களங்கள் பற்றி வெளிச்சப்படுத்தினோம்.
ஜெனீவாவில் நாம் எமக்கு நடந்த அநியாயங்களை எடுத்துரைத்தோம். அவ்வளவுதான். அதை நாம் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டோம். புலிகளின் கொலை களங்கள் பற்றி வெளிச்சப்படுத்தினோம்.
இது தவறா. இது தவறென்று நீங்கள் சொன்னால் நீங்கள் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவர்களாவீர்கள். இப்போதும் புலிகளின் கோட்பாடுகளை சுமக்கும் கூட்டம் என உறுதிப்படுத்தியவர்களாவீர்கள். புலிகள் யார் என்பது பற்றி நாம் இங்கு சர்சைபடுத்தவில்லை. ஆனால் எங்களை பொருத்த வரையின் தமிழீழ விடுதலை புலிகள் கொடிய பயங்கரவாதிகள். எங்களை அழித்தவர்கள்.
எம் சொத்துக்களை சூறையாடியவர்கள். எம் பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றவர்கள். எங்கள் மஸ்ஜித்களை அதே எங்களது இரத்தத்தினால் கழுவியவர்கள். எம் வாழ்வுரிமையை பறித்தவர்கள். கொள்ளையடித்தவர்கள்.
இப்படி இருக்க நாங்கள் மாகணசபையில் காணி பொலிஸ் அதிகாரத்தை கொடுத்து இன்னும் ஒரு முறை எங்களது இரத்தத்தால் எங்களது பள்ளிவாயல்களையிம் பூமியையும் கழுவ அரசு அனுமதி கொடுக்காமல் இருக்க வேண்டும்.
இப்படி இருக்க நாங்கள் மாகணசபையில் காணி பொலிஸ் அதிகாரத்தை கொடுத்து இன்னும் ஒரு முறை எங்களது இரத்தத்தால் எங்களது பள்ளிவாயல்களையிம் பூமியையும் கழுவ அரசு அனுமதி கொடுக்காமல் இருக்க வேண்டும்.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை வழங்கினால் சரியான தகவல் அடங்கியதனை அறிக்கையாக பிரசுரிப்போம் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.

0 comments :
Post a Comment