ரயில்வே கடவையில் சீமெந்து டிரக் வண்டி குடைசாய்ந்தது.


ண்டாரவளை கொலதென்ன ரயில்வே கடவையில் சீமெந்து ஏற்றப்பட்டிருந்த டிரக் வண்டியொன்று குடைசாய்ந்ததில் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த பொடிமெனிக்கே நகர்சேர் கடுகதி ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

பொடிமெனிக்கே ரயில் இரவு 7 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடைய வேண்டியுள்ள போதிலும், அது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவிக்கின்றது.

ரயில் கடவையிலிருந்து டிரக் வண்டியை அகற்றி, ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் உதவியை நாடியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :