பலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்டல்லா இராஜினாமா.

லஸ்தீன பிரதமர் ரமி ஹம்டல்லாவின் இராஜினாமாவை அந்த நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், ரமி ஹம்டல்லா இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது அமைச்சரவையில் அதிகாரம் தொடர்பான கருத்துவேறுபாடுகளை அடுத்து ரமி ஹம்டல்லா இராஜினாமா செய்யும் தனது தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

எனினும் அடுத்த நாள் அதனை அவர் வாபஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் உடனான நீண்டகால முரண்பாட்டை அடுத்து முன்னாள் பிரதமர் சலாம் பயாட் இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ரமி ஹம்டல்லா கடந்த 6 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :