6 வயது சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய 60 வயதான வயோதிபர் கைது

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் 06 வயது சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயதான வயோதிபர் ஒருவரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குறித்த சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளையில் குறித்த சிறுமியை மேற்படி வயோதிபர் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் பெற்றோர் சம்மாந்தறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள இந்த நிலையிலேயே 60 வயதான சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் சம்மாந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :