(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஒலுவில் கலாசார விளையாட்டு அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த 'மண்ணில் மங்காத விளையாட்டு கலைப் பெருவிழாவும், வாழும்போது வாழ்த்தும் நிகழ்வும் - 2013' சனிக்கிழமை 2013.04.13 ஆம் திகதி ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலய மைதாணத்தில் நடைபெற்றது.
இம்மண்ணின் கல்வி, கலை கலாசாரத்தை மேம்படச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியை ஒலுவில் கலாசார விளையாட்டு அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தோணியோட்டம், வலைப்பந்தாட்டம், கிரிகெற், மரதன் ஓட்டம், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையனைச் சண்டை, சாக்கோட்டம், பலூன் உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், முட்டை மாற்றுதல், பின் ஓட்டம், வினோத உடை போன்ற பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.எஸ்.ரத்நாயக்க மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைடீன் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் முதலாம் இடத்தினை இஷட்.எம்.சரத் ஹூசைனும், இரண்டாம் இடத்தினை பி.எம்.றிசாட், மூன்றாம் இடத்தினை இஷட்.எம்.நௌசாட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான பலுன் உடைத்தல் சிறுவர்களுக்கான போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டவர்களக்கான பரிசில் மற்றும் சான்றிதழ்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)

0 comments :
Post a Comment