நீச்சலுடையில் திறந்த நெஞ்சுடன் இருக்கும் மாணவ,மாணவியர்களுக்கு அருகில் தம்மால் இருக்க முடியாது என்ற ஒரு முஸ்லிம் மாணவியின் முறையீட்டை அடுத்து ஜேர்மனிய நீதிமன்றம் மாற்றுத் தீர்ப்பளித்துள்ளது. மொரோக்கோவைச் சேர்ந்த 12 வயதான இந்த மாணவி ஜேர்மனியில் தென் பிராந்திய பாடசாலையொன்றில் பயிலுகிறார்.
நீச்சல் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமை காரணமாக அவளுக்குப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தனக்கு அந்தப் பயிற்சிகளிலிருந்து விடுவிப்பு வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடர்ந்தாள். அவளுடைய வழக்கறிஞர் புனித குர்ஆனை ஆதாரம் காட்டி வாதிட்டாலும் நீதி மன்றம் அந்த மனுவை புறக்கணித்துவிட்டது.
0 comments :
Post a Comment