பெசன்பெக் விவகாரம் தெட்டத்தெளிவான வன்முறை என்று றிசாத் பதியுதீன் ஜனதிபதிக்கு அறிவிப்பு.



பெசன்பெக் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

பெசன்பெக் மீதான தாக்குதலை தெட்டத்தெளிவான வன்முறையென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்ளை கண்டுபிடித்து உடனடியாக சட்டத்தின் முன் கொண்டுவருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்களை தொடருமாயின் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவை இழக்கவேண்டி வருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்துள்ளதுடன், இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :