2011ம் ஆண்டுக்கான அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை இன்னமும் வெளியிடாமை மாணவர்களுக்கு செய்யும் அநீதியாகும் - முஸ்லிம் மக்கள் கட்சி


(எஸ்.அஷ்ரப்கான்)

2011ம் ஆண்டுக்கான அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை இன்னமும் வெளியிடாமை  மாணவர்களுக்கு செய்யும் அநீதியாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி பரீட்சை ஆணையாளருக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்டியுள்ளது.



    இது பற்;றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் பரீட்சை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,



கள்எலிய அறபுக்கல்லூரி மூலம் தமது பிள்ளைகள் எழுதிய 2011ம் ஆண்டுக்குரிய  அல் ஆலிம் பரீட்சையின் முடிவுகள் இன்னமும் வெளிவரவல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் எமது கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக மேற்படி மாணவர்கள் தமது மேற்படிப்பை தொடர, அல்லது தொழில் வாய்ப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாகியும் இன்னமும் பரீட்சை முடிவுகள் வெளிவராமை மாணவர்களுக்கு செய்யப்படும் அநீதி மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே 2011ம் ஆண்டுக்குரிய அல்ஆலிம் பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கும் படி பரீட்சை ஆணையாளரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. இக்கடிதத்தின் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :