(கல்வியலாளரும், எழுத்தாளருமான சாமஸ்ரீ தேசமான்ய,ஆசிரிய ஆலோசகர் : எஸ்.எல். மன்சூர் விடுத்திருக்கும் புத்தாண்டுச் செய்தி)
-----------------------
நேற்றைய நாளை கடந்த வருடம் என்கின்றோம். மனிதவாழ்வும் அப்படித்தான். இன்றிருந்தவர் நாளை மரணமடைந்துவிட்டால் அவரை பிணம் என்கிறோம். இதுபோலதான் மனிதவாழ்வும், இந்த உலகவாழ்வும், அதன் நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறு போகின்றோம். காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் ஆனால் மனிதரில் மாற்றம் என்பது இன்னமும் மாறவே இல்லை. பொய்கள், புறட்டுக்கள், மனிதத்துவத்தை மதிக்காத தன்மைகள் காணப்படுகின்றவர்களும் எம்;மத்தியில் இல்லாமலும் இல்லை. எல்லாம் மறந்து மனித உள்ளங்கள் இன்றைய நாளிலிருந்து சந்தோசமாக இருப்பதற்கும், வாழ்வதற்கும் எம்மை நாம் தயர்படுத்திக் கொள்ளவது அவசியமாகும். பொதுவாகவே புதுவருடப்பிறப்பு என்பதனால் மக்கள் சந்தோசமிக்கவர்களாகக் காணப்படுவது வழமையான ஒரு நடைமுறையாகும்.
நாட்டின் முதல் மனிதர் ஜனாதிபதி தொடக்கம் அனைவரும் மற்றவருக்கு வாழ்த்துக்கூறுவதும், புதிய விடயங்களை ஆரம்பிப்பதும், இவ்வாண்டுக்கான புதுப்புது நடைமுறைகளை ஆரம்பிப்பதும், கடந்த வருடத்தைவிட இவ்வரும் அந்த விடயத்தை செய்தே தீருவது என்கிற உறுதியினையும் புதுவருடத்தில் ஏற்படுத்த முயல்வதையும் நாம் காணலாம். பழைய கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப நாமும் புதுவருடத்தின் வரவை வாழ்த்தி நிற்பதுடன், கடந்த வருடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பல துக்ககரமான, சந்தோசமான விடயங்களையும் திரும்பிப்பார்ப்பதும், இரைமீட்டுவதும் நல்லதல்லவா? ஏனெனில் அதனை மீட்டுவதன் ஊடாக இவ்வருடத்தில் நமது பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்வது, கடந்தவருடத்தில் நமது பாதையில் ஏற்பட்ட தடங்கள்கள், விபரீதங்கள் போன்றவற்றை புதுவருடத்திலிருந்தாவது ஒரு மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பது நமது வாழ்க்கைக்கு சக்தியயூட்டும் செயலாக அமைகின்றது. அந்தவகையில் மனித இயல்புகளுக்கேற்ப நாமும் 2013ஆண்டை எம்மிடையே மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக வரவேற்று, அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
0 comments :
Post a Comment