எஸ். எல். மன்சூர்(B.Ed),
அட்டாளைச்சேனை.
---------------------------------------
தலைநிமர்ந்து நிற்கும் ஒரு கலைக்கூடம். இன்று இன ஒற்றுமையின் விளைநிலமாகவும்
காட்சிதருகிறது. அதன் அபிவிருத்தி மாத்திரம் மந்தகதியில் செல்கிறதா?
எதிர்கால நற்சமூகத்தின் விடியலுக்காய் தன்னையே உருக்கி, சமுதாயத்தின்
உயர்வுக்காய், ஒளிவிளக்காய் பரினமிப்பவன்தான் ஆசிரியன். அந்த ஆசிரியனையே
புடம்போட்டு எடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் இந்த ஆசிரியர்
பயிற்சிக்கலாசாலைகள். அதிலும் நாட்டின் மாணவச் செல்வங்களின் நல்லறிவுக்கு
உறுதுணையாக அமைந்த இவ்வாறான கலாசாலைகளின் முன்னோடிகளில் இன்றும் வீறுநடைபோட்டு
கல்விப்பணிதனில் ஈடுபடும் ஆசிரியப் பெருந்தகைகளை பயிற்றுவித்து சிறந்த
ஆசான்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர்
கலாசாலையும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
இக்கலாசாலையானது கிழக்கு மாகாணத்தின், அம்பாரை மாவட்டத்தின்
கரையோரப்பிரதேசமான அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் அட்டாளைச்சேனை
எனும் அழகிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ளமை அதன் சிறப்புக்கு மேலும்
வலுவூட்டுவனவாக அமைகிறது. கிழக்கே அழகிய வங்காள விரிகுடாவும், மேற்கே
கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் எனக்காட்சிதருகின்ற பொண் விளையும்
நெல் வயல் நிலங்களையும், வந்தாரை வாழவைக்கும் பரோபாகர உளம்படைத்த மக்கள்
வாழும் இக்கிராமத்தில் அமையப்பெற்று, கடந்த 71ஆண்டுகளையும் கடந்து,
பார்ப்போரை மீண்டும் பார்க்கத்;தூண்டும் பரந்த பிரதேசத்தில் கம்பீரமாக
அமையப்பெற்றதுதான் இந்த ஆசிரியர் கலாசாலையாகும்.
ஒருகாலம் இருந்தது முஸ்லீம்களின் மத்தியில் மதத்திற்கு விரோதமான
செயற்பாடுகளில் யார் செயற்பட்டாலும் அவர்களிடமிருந்து பிரிந்து தானுண்டு,
தன்மதம் உண்டு என்று வாழ்ந்து, பின்நாளில் ஆங்கிலக் கல்வியையும் விரோதித்து,
தன்பிள்ளை மதம் மாறிவிடுவான் என்று பயந்து வாழ்ந்தது அந்தக்காலத்தில்.
அதனையும்தாண்டி ஒருசிலர் கற்ற ஆங்கிலக்கல்வியின் பயனாக முஸ்லீம் சமுதாயத்தையே
மாற்றியமைப்பதற்கு உதவியிருக்கிறது. அதுமட்டுமல்லாது பாடசாலைகள்
முஸ்லீம்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு கற்பிக்கவும், தனது
மார்க்கக்கல்வியை போதிப்பதற்கும் ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டதன்பின்பு பயிற்சிகள் தேவைப்பட்டபோதுதான் இக்கல்லூரி
ஆரம்பிப்பதற்கு வழிகோலி நின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் இன்றைக்கு சுமார் 71ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது
கடந்த 1941ஆம் ஆண்டில் அக்கால கல்வியமைச்சரும், நாடுபோற்றும்
இலவசக்கல்வியின் தந்தை என்று அழைக்கப்பட்டு வருபவருமான கலாநிதி ஊ.று.று.
கன்னங்கரா அவர்களுடன் அன்றைய முஸ்லீம்களின் கல்விக்கான தாகத்தில் இருந்த
பெரியார்களான டிபி. ஜாயா, சேர் ராசிக்பரீட் போன்றோர்களின்
விடாமுயற்சிகளின் பயனாக 1937ம் ஆண்டில் அரச சபையில்; முன்வைத்த கோரிக்கைக்கு
அமைவாக தரித்தவைதான் இந்த அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையாகும்.
முஸ்லீம்களுக்கென இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 10ஆண்டுகளுக்கும்
மேலாக (இன்றுவரையும்) ஏனைய சமயத்தவர்களும் பயிற்சியாளர்களாக இணைந்து
கற்றுவருவதானது ஒற்றுமையின் சின்னமாகவே இதனை பார்க்கமுடிகிறது. நாட்டில் கடந்த
30ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றைக்கண்ணுடன் பார்க்கப்பட்டுவந்த சமுதாய வேறுபாடுகள்
அன்றே களையப்பட்டு சமாதானத்தின் விதைகளை நட்டு ஒற்றுiமிக்கதான கல்வி மலர்களை
பூக்கவைத்து நாடு முழுவதும் மணம்பரப்பி வருகின்ற இக்கலாசாலையின் சேவை
தடம்பதித்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிப்படைகிறது என்றே கூறலாம்.
உண்மையில் கடந்துவந்த பாதையில் வெளியிட்ட புஷ;பங்கள்தான் எத்தனை! எத்தனை!!
ஆயிரங்கள்! நாடுபோற்றும் அறிஞர்களாக வலம்வந்து கொண்டிருக்கும் பலரின் ஆரம்ப
பயிற்சிக்களமாக அமைந்த இக்கல்விக்கூடத்தில் பயின்றதனால் நாடுபூராகவும்
இன்றுவரையும் மாணவச் செல்வங்களின் உயர்வுக்கு வித்திட இவ்வறிவாலயம்
உதவித்தான் நின்றதை, இன்று அதன் விருட்சங்களாக வாழ்பவர்கள் மறக்கத்தான்
முடியுமா? ஆதலால்தான் இலங்கை மாதாவின் புத்திரர்களின் சமாதானத்தின்
சகவாழ்வுக்கு அன்றும் இன்றும் தமிழ்பேசும் மக்களினது அறிவுக்கும், தமிழர் முஸ்லீம்
ஒற்றுமைக்கும், கல்விமூலமான பயணத்தின் கைகுலாவும் இக்கலசாலை, உண்மையில்
ஐக்கியம் பிறக்கும் இடம் கல்விதான் என்பதை நிரூபித்து நிற்கிறது.
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் பிறந்த நாள் விழாவில்
ஆனால் அந்த பல்கலைகளையும் பல்லின மக்களுடன் கலந்து கற்கின்ற ஒரு விடயத்தைக்கூற
மறக்கின்றோம். இக்கலாசாலையினது கீதத்தில் வருகின்ற வரிகள் அனைவரையுமே
பூரிக்க வைக்கிறது அதாவது
'அகிலம் ஆளும் ஆண்டவா – உன்
அருளைத் தேடிப் பாடுவோம்.
சகல கலைகளும் நினதருள் கொண்டு தாராய்
பரமனைப் பல பணிகளியற்றி.
சிரம் பணிந்து நற்துதிகள் செலுத்தி
காலை மாலையில் கலை நிலை ஓங்கத் தேடி
நிரந்தரக் கலை புரிந்தருள் பெற
நினைந்து பயிலும் நேர்மையாலே (அகிலம்)' இவ்வாறு செல்கின்றது இக்கீதம்..
உண்மையிலேயே கலைகளையெல்லாம் கற்றிட இக்கலைத்தாய் உதவுகின்ற முறைகளைப்ப
பார்க்கின்றபோது இனிமேல் இப்புண்ணிய பூமியில் சமாதானத்தின் வெளிப்பாடுகள்
நிரந்தரமாய் இருப்பதற்கு இக்கலாசாலையின் வெளிப்பாடுகளும், பயிற்சிகளும்,
மாணவர்களின் ஒன்கூடல்களும் வெளிப்படுத்தியே நிற்கின்றன.
இங்கு கற்பிக்கும் பாடநெறிகளாக ஆரம்பக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்,
அரபு, இஸ்லாம், உடற்கல்வி, வணிகம், கைவினை, சமூகக்கல்வி, சித்திரம்,
இரண்டாம் மொழி;ப்போதனைகள்(தமிழ்;, சிங்களம்) எனப்பல்துறைகளிலும் தனது
பாங்கினை செலுத்தி வருகின்ற இக்கலையகம், அன்றும் இன்றும் அதன் அறிவார்ந்த
நிழலை நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து வருகைதந்து பயின்று வரும் ஆசிரியர்
பெருந்தகைகளே சாட்சியாவர். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்பசியாற
கல்விக்கடலில் மூழ்கி அதனை மற்றவரும் பெறவிளைந்தோடிவிடும சமுதாயச்சிப்பிகள்
என்றென்றும் நினைவினில் வருகின்ற இக்காலாசாலையின் மகுடத்தைப்
பெற்றவர்கள்யாரும் இலகுவில் மறக்;;கமுடியாத கலாபவனம் என்றே கூறலாம்.
இக்கலாசாலையானது சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் வியாபித்து கம்பீரமாய்
வீற்றிருந்தபோதுதான் இதன் ஒருபகுதியில் 1992ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியையும் உள்வாங்கியதுடன், தென்கிழக்கு
பல்கலைக்கழகம் (ஒலுவிலில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்) ஆரம்பிக்கப்பட்டதும்
இந்தக்கலாசாலையின் மடியில்தான் என்பதையும் நினைவிற் கொண்டு, இக்கலாசாலையின்
எழுச்சிப் பாதையில் அங்கு கடமையாற்றும், கடமையாற்றிய பல அதிபர்களும்,
விரிவுரையாளர்களும், பல அரசியல் பெருந்தகைகளும் தத்தமது பங்கினை செலுத்தியே
வந்துள்ளனர்.
எந்வொரு நிறுவனமும் அதன் வளர்ச்சிப்படிகளுக்கு உதவியாக அமைந்தவர்கள் முதற்தர
நிருவாகிகள் எனப்படுகிறது. நல்ல நிருவாகமே எதிர்பார்க்கும் வெளியீட்டைத்தரும்.
அந்தவகையில் இன்று இக்கல்லூரியின் முதல்வராக இருக்கின்ற மௌலவி அல் - ஹாஜ்.
எம். எஸ். அப்துல் ஹபீழ்(ஷர்க்கி)-ளுடுநுயுளு அவர்கள் இரவு பகல் பாராது
சேவையாற்றிவருகின்றார். இவரது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக
தமிழர், முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு, சிறப்பானமுறையில் பயிற்சிகள்
பெறுவதற்கு மிகவும் உந்துசக்தியாக செயலாற்றிவருகின்றார் என்பதை அங்குள்ள
பயிற்சியாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கலாசாலையிலிருந்து வெளியாகின்ற வருடாந்த மலர்தான் 'கலையமுதம்' என்கிற
தேணமுது என்றே கூறலாம். கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைக்கும் அதன்
சுழற்சியில் மாறாது பல ஆக்கவூக்கச் சிந்தனைகள் பொதிந்த கல்வி, கலை,
கலாசாரம், பண்பாடுகள், ஒழுக்கவியல், ஆய்வியல், கவிதை, சிறுகதை போன்ற
எண்ணற்ற எழுத்தாடல்கள் மூலம், சிறந்தஆளுமையுள்ளவர்களை உருவாக்குவதற்கு
காரணகர்த்தாவாக அமைந்தவைதான் இக் கலையமுதம் எனும் சஞ்சிகையாகும். மேலும்
கடந்த 11ஆண்டுகளாக ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரிவுகளின் கீழாக வருகின்ற
சில உபசஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றமை சிறப்பான விடயமாகும்.
இவ்வாறு தனது கடந்தகால வாழ்வுடன் இக்கால கல்வி மாற்றத்திற்கேற்ப விரிவுரைகள்
நடைபெற்று வருகின்ற போதிலும், நவீன முறைகளில் அமைந்த கல்வி ஏற்பாடுகள்
போதியளவில் இங்கு நடைபெறவில்லை அதனை நிவர்த்தி செய்வதில் முஸ்லீம்
அமைச்சர்களும் கூடிய கரிசனை எடுக்கவேண்டுமென பயிற்சி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
'தமது விரிவுரையாளர்கள் பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் பயிற்சிகளையும்,
விரிவுரைகளையும் தந்துதவுகின்றனர். அதேவேளை தற்கால கல்விக்கு ஏற்றதான ஆய்வு
கூடங்களோ, கணனி கூடங்களோ, நவீன தொழிற்நுட்ப கூடங்களோ இல்லாது வெறுமனே
அமைந்த கல்விப் பயிற்சிகளே தங்களுக்கு வழங்கப்படுவதாகவும், பல நிரந்தரமற்ற
தற்காலிக விரிவுரையாளர்களும் விரிவுரைகளை ஆற்றுகின்றனர் நிரந்தமான
விரிவுரையாளர்கள் பலரை வேண்டிநிற்கின்ற இக்கலாசாலையின் தரமும் தாகமும்
உயர்வடைந்து நவீன கல்லூரியாக தலைநிமிர்ந்து நவீன கற்றல் திறன்கள்
உருப்பெடுத்து உலாவரும் இன்றைய பாடசாலைக்குகந்த பயிற்சிகளை வழங்குதலின்
அவசியத்தை கிலாகித்தனர்;' பயிற்சி ஆசிரியர்கள்.
எனவேதான் காலத்திற்கேற்ற பயிற்சிகளையும், நவீன முறைகளில் அமைந்த
கட்டிடங்களையும், உபகரணங்களையும் கொண்டு மேலும் பயிற்சிகளில் ஆசிரியர்களைப்
பயிற்றுவிக்கவும், இனரீதியான மாணவர்களின் ஒற்றுமைக்குரிய பண்பாடுகளை நாடு
முழுவதும் விதைத்திருக்கும் பல விற்பன்னர்களை வெளியிட்டுள்ள இக்கலாசாலையின்
அபிவிருத்திகள் செய்யப்படவேண்டிய நிலையில், இதன் அபிவிருத்தியில் முஸ்லீம்
அறிஞர்கள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றுபட்டுழைக்க
வேண்டும் என்பதே அனைவரினதும் அவா!
......................................
எஸ். எல். மன்சூர்(B.Ed),
அட்டாளைச்சேனை.
0 comments :
Post a Comment