சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு.
சுனாமி நினைவு தினத்தையொட்டி அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரதான நிகழ்வொன்று கடந்த 26ம் நாள் பதுளையில் நடைபெற்றுள்ளது.
முதலில் ஜானதிபதி மகிந்த ராஜபக்ஷ இதில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்துள்ளார் எனினும் அவரால் அதில் பங்கேற்க முடியாது போனதால், அவருக்குப் பதிலாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டா ர ஆகியோர் கொழும்பில் இருந்து சிறிலங்கா விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் பதுளைக்குப் புறப்பட்டனர்.
பதுளையில் ஒரு மைதானத்தில் ஹெலிகொப்டரை தரையிறக்குவதற்கு விமானி முயற்சித்த போதிலும் அடர்ந்து காணப்பட்ட மேகக் கூட்டத்தினால் அவரால் தரையிறக்க வேண்டிய இடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஹெலிகொப்டரில் இருந்த சப்ரகமுவ ஆளுனர் லொக்குபண்டார பிரித் ஓதத் தொடங்கியுள்ளார்.
பின்னர் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஒருவழியாக விமானி விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
ஹெலிகொப்டர் பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கியதும், பிரித் ஓதி அதைப் பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக லொக்குபண்டாரவுக்கு எல்லோரும் நன்றி கூறியதாவும், விமானிக்கு எவரும் நன்றி கூறவில்லை என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment