முசலி பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள்


தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்ட முசலி பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள் இன்று முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹியாவின் தலைமையில் முசலி பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முசலி பிரதேச சபை பிரதி தலைவர் மௌலவி பைரூஸ்,பிரதேச சபை உறுப்பினர்கள் சுபியான்,அப்துர் ரஹ்மான்,காமில்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் ஹரீப்,பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முசலி பிரதேசத்தில் வெள்ளத்தால் 3500 ஏக்கர் விவசாய நிலம் சேதமுற்றிருப்பதாகவும், 36 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும், ஆயிரத் துக்கும் மேற்பட்ட கால் நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் 500 வீடுகள் பாதியளவும்,20 வீடுகள் முற்றாகவும் அழிந்துள்ளதாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கூறினார்.
அதே வேளை சவேரியார் புரத்தில் வசித்து வரும் நீர்கொழும்பு பிரதேச மீனவக் குடும்பங்களின் தேவைகள் குறித்தும் முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான் தலைமையில் சென்ற குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
????????????????????
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :