அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் நீரில் மூல்கிக் காணப்படுவதையும், 12ம் குழாய் வாய்க்கால் பிரதேசம் ஆற்று வாலைகளால் நிரம்பிக் காணப்படுவதையும், இவ் ஆற்று வாலைகளை அகற்றுவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் இன்று 2012-12-22 பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு;ள்ளதாகவும், அவர்களுக்கு நஸ்டஈடுகளை வழங்குமாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அது மட்டுமல்ல நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடமும் இவ்விடத்தில் உள்ள ஆற்று வாலைகளை அகற்றி நீர் பாய்ந்தோடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தள்ளேன்.
இப்பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்துபவர்களாகும். இவர்களுக்குரிய நஸ்டஈடுகள் கிடைக்கப் பெற அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதோடு இவ்விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment