பழம்பெரும் நடிகை மைனாவதி மரணம்


Old acress Mayavathi died
பழம்பெரும் நடிகை மைனாவதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் நடிகை பண்டரியின் சகோதரி ஆவார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக நடித்த ஹமாலையிட்ட மங்கை' படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் இடம் பெற்ற செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பாடலில் மைனாவதி நடனம் ஆடியிருந்தார். இந்த பாட்டும்இ நடனமும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தது. இப்போதும் இப்பாடல் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக மைனாவதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :