இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கிய '3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறிடி பாடலை தனுஷ் பாடினார். இது உலகம் முழுவதும் ஹிட்டானது. இதையடுத்து மற்ற மொழி பட இயக்குனர்களின் கவனம் தனுஷ் பக்கம் திரும்பியது. ஆனந்தராய் இயக்கும் 'ராஞ்சாÕ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதில் சோனம் கபூர் ஜோடியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் காசியில் பெரும்பகுதி நடந்துள்ளது. மலையாள படவுலகை பொறுத்தவரை விஜய்இ அஜீத்இ சூர்யா படங்களுக்கு மட்டும் வரவேற்பு இருந்து வந்தது.
இந்த வரிசையில் தனது படமும் இடம் பிடிக்க வேண்டும் என்று தனுஷ் விரும்பினார். அதற்கான தருணத்துக்கு காத்திருந்தார். அது இப்போது அமைந்துள்ளது. இயக்குனர் தாம்சன் இயக்கும் காமத் அண்ட் காமத் என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இது பற்றி இயக்குனர் கூறும்போதுஇ 'இப்படத்தின் கதையை தனுஷிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த வேடம் கிளைமாக்ஸில் திருப்புமுனையாக இருக்கும்Õ என்றார். இப்படத்தில் மம்மூட்டி நடிக்கிறார். அவர் மீதான மரியாதை காரணமாக இந்த வேடத்தை தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment