Share on
புத்தளத்தைச் சேர்ந்த சிறுமி ஆமினா ரஹ்மத் அண்மையில் சிரச தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட ‘பொட்டன்ட புளுவன்’ நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியமை பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் HULA HOOP எனும் உடற்பயிற்சி மூலமே தனது திறமையை வெளிப்படுத்தி இப்போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்ற

தோடு மட்டுமன்றி பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
2004.10.19 அன்று ஆஷிக் நிம்றி- பர்மியா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாக பிறந்த ஆமினா, முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸின் பேத்தியுமாவார். தனது சிறு வயதிலேயே 2 வருடங்கள் இந்தியாவிலும் இரண்டு வருடங்கள் பாகிஸ்தானிலும் கழித்த ஆமினா, பின்னர் இலங்கை திரும்பி தனது பிறந்த இடத்திலேயே வசித்து வருகின்றார். புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஆமினா ரஹ்மத் கல்வியில் சிறந்து விளங்குவதோடு தமிழ், சிங்களம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.
சிரச தொலைக்காட்சி நடத்திய மேற்படி சிறுவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் ‘பொட்டன்ட புளுவன்’ (சிறுவர்களால் முடியும்) எனும் நிகழ்ச்சியில் ஏனைய சிறுவர்கள் ஆடல் பாடல் என தமது துறையைத் தேர்ந்தெடுத்தாலும் ஆமினா ஏதடூச் ஏணிணிணீ எனும் உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்தது ஏன்?
HULA HOOP உடற்பயிற்சியின் வரலாறு
1935-1940 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் புத்தளத்தில் வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் இருந்துள்ளார். இவரின் பெயர் கொலக்ஸ். அப்போது புத்தளத்தில் வாழ்ந்த பெண்கள் எதுவிதமான உடற்பயிற்சிகளையோ அல்லது யோகாசனங்களைசெய்வதில்லை. இதனால் அவர்களுக்கு நோய் ஏற்படுவதுடன் அவர்களுடைய உடற்பருமனும் பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளது.
இதனையடுத்து பெண்கள் அப்போது இருந்த வெள்ளைக்கார வைத்தியரான கொலக்ஸை சந்தித்து தமது உடல் பருமனை குறைப்பதற்கு ஆலோசனை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘‘பிரம்பை வளையமாக வளைத்து அதற்குள் இருந்து HULA HOOP எனச் சொல்லிச் சொல்லி சுற்றுங்கள்’’ எனக் கட்டளையிட்டுள்ளார். அவ்வாறு செய்தால் மாத்திரமே உடல்பருமனுக்கு தன்னால் வைத்தியம் செய்ய முடியும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.
எனவே எப்படியாவது மருந்து எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அப்போதைய பெண்கள் HULA HOOP எனக் கூறி வளைந்து உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார்கள். இந்த பயிற்சியில் தொடர்ந்து ஆசையும் ஆர்வமும் கொண்ட புத்தளத்திலுள்ள மக்கள் இந்த HULA HOOP உடற்பயிற்சியை பாரம்பரிய கலையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என புத்தளத்தின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
எனவே புத்தளத்திற்கே உரித்தான HULA HOOP உடற்பயிற்சிக் கலையை வாழ வைத்து அதனை நாடெங்கும் அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே ஆமினா ரஹ்மத் இந்த HULA HOOP ஐ தெரிவு செய்திருக்கிறார்.
HULA HOOP உடற்பயிற்சியானது முதலாம் வளையம், இரண்டாவது வளையம், மூன்றாவது வளையம் என்பவற்றிலேயே பயிற்சி செய்துள்ளனர். ஆனால் ஆமினா ரஹ்மத் எடுத்த ஊக்கமும் விடா முயற்சியுமே HULA HOOP வளையத்தை நிலத்திலிருந்து தனது காலினால் எடுத்து சாகசம் புரிவதாகும். இதுவரை எவருமே இவ்வாறு செய்தது கிடையாது என இத்துறைசார்ந்த கலைஞர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஆமினாவின் சாதனைதான் என்றும் கூறுகின்றனர்.
சிரச தொலைக்காட்சியில் ஆமினா
இந்த ‘பொட்டன்ட புளுவன்’ போட்டி கடந்த 6 மாதங்களாக 15 சுற்றுக்களாக இடம்பெற்றது. ஆரம்ப சுற்றில் இருந்து தனது திறமைகளை வெளிக்காட்டி பார்வையாளர்களையும் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தி ஆமினா ரஹ்மத் இறுதிச் சுற்றுக்கு தெரிவானார். அதுவும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 12 பேரில் ஒருவராக அதுவும் தமிழ் பேசும் சிறுமியாக விளங்குகிறார்.
ஆமினாவுக்கு கொழும்பைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணத்துவ கலைஞரான தர்ஷன் உடற்பயிற்சி ஆசானாக விளங்கியிருக்கிறார். இறுதிச் சந்தர்ப்பத்தில் தர்ஷன் கொடுத்த பயிற்சியும் ஊக்கமுமே ஆமினா மேலும் திறமையாக செயற்படக் காரணம் என ஆமினாவின் பெற்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆமினாவுக்கு கிடைத்த ஆதரவுகள்
இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஆமினா ரஹ்மத் தான் கலந்து கொண்ட போட்டியாளர்களையெல்லாம் விட உயரத்திலும் வயதிலும் மிகவும் சிறியவர்தான். ஆனால் அவர் வெளிக்காட்டிவரும் திறமைகளே ஆமினாவை வெற்றி பெறச் செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திறமைக்கே முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர எவருடைய அழுத்தங்களோ அல்லது இன ரீதியான போக்குகளோ முதன்மை பெற்றிருக்கவில்லை என்பதை ஆமினாவின் வெற்றியே உறுதிப்படுத்துகிறது.
ஆமினாவின் திறமைகளைக் கண்ட பலர் ஆமினாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளார்கள். புத்தளத்தில் மட்டுமின்கறி நாட்டின் பல பாகங்களிலுமிருந்து இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவருமே ஆமினாவுக்கு எஸ்.எம்.எஸ்.ஆதரவு வழங்கியுள்ளார்.
14 ஆவது சுற்று வரைக்கும் 1 இலட்சத்து 20 ஆயிரம் எஸ்.எம்.எஸ். ஆமினாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதிச் சுற்று இடம்பெற சமயம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவிக்கும் நேரத்தில் இருந்து 1 மணித்தியாலயத்திற்குள் அதாவது 60 நிமிடங்களில் ஆமினாவுக்கு கிடைத்த எஸ்.எம்.எஸ்.கள் 6 இலட்சங்கள். ஆமினா ரஹ்மத் இந்த போட்டியில் மொத்தமாக 7 இலட்சத்து 20 ஆயிரம் எஸ்.எம்.எஸ். ஆதரவைப் பெற்றே இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

அது மட்டுமின்றி புத்தளத்திலுள்ள பாடசாலைகளும் பொது அமைப்புக்களும் ஆமினாவின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளன. அத்துடன் காத்தான்குடி, கல்முனை போன்ற கிழக்கு மாகாண பிரதேசங்களில் பொது இடங்களில் பல்லூடக திரை மூலம் ஆமினாவின் திறமைகளை காட்சிப்படுத்தி எஸ்.எம்.எஸ். அனுப்புமாறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு 7 வயது சிறுமியின் சாகசத்தை பார்த்த பலர் தமது ஆதரவுகளை வழங்கியிருக்கிறார்கள்.
இப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பிலுள்ள பெரும் பாடசாலையொன்று ஆமினாவை கல்வி கற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் ஒரு பெரிய விளம்பர நிறுவனம் சிங்களத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்தரத்தில் நடிப்பதற்கு அழைப்புவிடுத்திருக்கிறது.
ஆனால் எவருடைய அழைப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாமல் தாம் வாழும் புத்தளத்திலேயே ஆமினா இருக்க வேண்டும் அவரது பெற்றோர் குறிப்பிடுகிறார்கள்.
ஆமினா ரஹ்மத் இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச நாடுகளுக்கும் போட்டியில் கலந்து கொள்ள புத்தளத்திலிருந்தே செல்ல வேண்டும். இது எமக்கும் பெருமை புத்தளம். இதுவே மண்ணுக்கும் எமக்கும் பெருமை தரும் எனவும் ஆமினாவின் பெற்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிறந்த திறமையை வெளிப்படுத்திய ஆமினாவுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

0 comments :
Post a Comment