காரைதீவில் அறநெறிமாணவர் ஏற்றிய கார்த்திகை தீபம்!



காரைதீவு சகா-
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வானது, நேற்றுமுன்தினம்(18) மாலை 6 மணிக்கு காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவிகளின் தீப நடனம் மற்றும் நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் தீபம் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில், மன்றச்செயலாளரும் இந்துகலாசார உத்தியோகத்தருமான கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு ஒருமணிநேரம் கொட்டும்மழைக்குமத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

விபுலாநந்த பணிமன்ற மன்ற முன்னாள் தலைவரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்ற அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம், செயலாளர் எஸ். நந்தேஸ்வரன், உபதலைவர் எஸ்.ஸூரநுதன், முன்னாள் செயலாளர் கே.கணேசராஜா, உபசெயலாளர் எஸ்.விஜயரெத்தினம், நிர்வாக சபை உறுப்பினர்களான ரி.நடேசலிங்கம் ,எம்.வடிவேல், எஸ். சிவாகரன் மற்றும் நடன ஆசிரியை ஜெ.தட்சாயினி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய நடன ஆசிரியை செல்வி தக்சாளினி ஜெயகோபன் தயாரித்தளித்த நடனமாணவிகளின் தீபநடனம் மேடையேறியது.

மன்றச்செயலாளரும், இந்துகலாசார உத்தியோகத்தருமான கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.

மேலும், நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர் ஆசிரியர்கள் சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :