COVIND - 19 *உலகில் ஏற்படுத்திய நேர்மறை மாற்றங்கள்*

ல்லாஹ் மனிதனை சோதிப்பதற்காகவே இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். நாம் இவ்வுலக இன்பங்களை மட்டும் அனுபவீப்பதற்காக அனுப்பப்படவில்லை. அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான். "இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளயைாட்டும்,வீணும்,அலங்காரமும் (அது) உங்களுக்குகிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும் பிள்ளைகளிலும் ( ஒருவருக்கொருவர்) அதிகரித்துக்கொள்வதும் தான்........" (ஸுறா ஹதீத் : 20) இக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிட்டுள்ளவாரே இவ்வுலக வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆன்ல் COVIND -19 இந்நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது. இவ் அனதை்தும் இவ்வுலக அலங்காரமே என்பதை எமக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த உலகம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு விதமான அனர்தங்களுக்கும், இழப்புகளுக்கும்,சோதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. இச் சவால்களை மனிதன் வெற்றிகரமாக எதிர்கொண்டாலும் அதிலிருந்து மீள்வதற்கு மனிதன் கொடுத்த "உயிர்கள்" தான் விளைமதிப்பற்றவை.

போட்டிச் சூழல் நிலவி வருகின்ற இன்றைய நூற்றாண்டிலே நாட்டுக்கு நாடும் தன் நாட்டிற்குள்ளும் மனிதன் தான் மாண்பு உள்ளவன் என்ற நிலபை்பாட்டில் இருந்து விலகி ஐந்தறிவு படைத்த மிருகமாகவே தன்னை மாற்றிக்கொண்டு வாழ்கின்றான். பணம், பதவி, அந்தஸ்து என்ற நிலைபாடு மட்டுமே உயர் வாழ்வுக்கான வழி என்று தன்னை போலி உலகிற்கு ஏற்ற மெழுகு பொம்மையாக மாற்றிக்கொண்டு அதற்கேற்ற ஒரு வாழ்க்கைக் கோலத்தை வடிவமதை்திருக்கின்றான்.

குடும்பம் என்றால் என்னவென்று அறியாதவனாய் தன் வாழ்க்கையை நகர்த்தி சென்றான். தன் குடும்பத்தின் மேல் கருணை காட்டுவதற்கு பகரமாக பணத்தின் மேல் மோகம் கொண்டவனாக வாழ்ந்தான். 

அதையெல்லாம் தாண்டி இன்று
ஒரு சொல் பல பொருள் போல 'கொரோனா' எனும் ஒரு சொல்லில் பல
படிப்பினைகள், பயன்கள், அனுபங்கள் ஏராளம் பெற்றுள்ளோம். உலகின் பல நாடுகள் தங்களால் இப்போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எத்தனையோ இறப்புக்களை நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டே வருகின்றது. பல நாடுகளில் ஆயுதங்களை சுமந்த கப்பல்களும் கண்டங்கள் பல தாண்டி ஒலித்த பிரங்கிகளும் இன்று கேட்பார் அற்றுக்கிடக்கின்றன. அரசியல்,சமூக, பொருளாதார,இரானுவ ரீதியில் ஓங்கி இருந்த நாடுகள் எல்லாம் ஒடுங்கிப்போய்க் கிடக்கின்றன.

பிரேசில்,இதாலி, அமேரிக்கா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு அதிகப்படியான இறப்புக்களை சந்தித்ததுக்கான காரணம் இந்த virus இன் தாட்பரியம் புரியாமல் செய்யப்பட்டது தான். உலகில் உள்ள ஒவ்வொறு நாட்டுத் தலைவர்களும் தங்களுடைய நாட்டில் பல இலட்சக்கனக்கான மக்கள் இந்த வைரஸ் மூலம் இறக்கின்ற போது அவர்கள் கண்ணீர் வடித்தது மாத்திரம் இன்றி தஙகள் பதவிகளையே இராஜனாமா செய்கின்ற பல அதிர்ச்சியான நிகழ்வுகளுக்கு இந்த covid 19 காரணமாக அமைந்துள்ளது. 

பல நாடுகளில் மாணவர்களின் கல்வி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதோடு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கும் வறுமையில் மக்கள் சிக்குவதற்கும் இந்த வைரஸ் நோய் காரணமாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்களிடையே மன அழுத்தம் , கவலை அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

வல்லரசு என மார்தட்டிய அமெரிக்கா இந்த பீடிக்குள் உள்வாங்குபட்டு சிக்கித்தவிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் முறையற்ற உணவு பழக்கங்களும் போதிய ஓய்வு இன்மையும் உடல் ஆரோக்கியம் இன்மையும் காரணம் என உலக சுகாதார தாபனம் கூறுகின்றது.
ஐரோப்பாவின் பண்பாட்டிற்கு பெயர் போன இதாலி மக்கள் பணத்தில் எந்த பிரயோசனமும் இல்லை என்று உலகமே பார்கும் அளவிற்கு பணத்தை பாதையில் தூக்கிவீசுகின்றனர். 

அடுத்த நாடுகளை அடிமை படுத்தி காலணித்துவத்திற்கு பெயர் போன பிரிட்டன் நாட்டு இளவரசர் பிரதமர் உட்பட பலர் இந்த கோரப்பிடிக்குள் சிக்கப்பட்டனர். இவை அனைத்தும் எமக்கு உலகில் எவரும் பெறுமையடித்து வாழமுடியாது.எல்லாருமே சமம் எனும் யதார்த்தத்தை உணர்தி உள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் ஏனைய வளர்ந்து வரும் நாடுகளின் மருத்ததுவ வசதிகளை பொற்றுக்கொள்கின்றன. உலக நாடுகள் தங்களுக்கிடையே பொருளாதாரம், வளர்ச்சி, அரசியல், என்ற போட்டி எல்லாம் இன்றி அனைத்து நாட்டுத் தலைவர்களும் தஙகளுடைய நாட்டையும் நாட்டை மக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். 

உலகில் உள்ள எல்லா நாடுகளுமே சந்தித்த சவால்களாக புவி வெப்பமடைதல், சூழல் மாசடைதல் ( வழிமுறை, நீர், நிலம்), போதைப்பொருள், உள்நாட்டுப்போர், இயற்கை வளங்களின் குறைவு, வல்லரசு நாடுகளின் அதிகாரப் போட்டி , தொழிநுட்ப வளர்ச்சியின் எல்லை மீறல், மக்கள் ஒரு வகை அழுத்தத்தில் செயற்படல் போன்ற பாரிய சவால்களை முன்னிலைப் படுத்தலாம். ஒரு வகையில் covid 19 இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்காலிக தீர்வாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்னுமொரு பார்வையில்
மனித தொழிநுட்பம், உயிரியல்துறை, சுகாதாரத்துறை மீது கவனம் செலுத்துதல், மனித வளத்தை அதிகரித்தல், அவசர சூழ்நிலைக்கு தயார்படுத்தல், வீட்டுடன் கூடிய இரண்டாம் நிலை வாழ்வாதாரம், மனிதநேயம், நாடுகளுக்கு இடையிலான கூட்டுணர்வு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மீது கவனம், சமய நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்படல், நிலம், நீர் மற்றும் வளி தொடர்பான ஆர்வம், பெண்கள் உழைப்பை அறியும் சூழல், பணத்தின் பெறுமதின்மை ,
பணத்திற்கும் பதவியிற்குமான பெறுமானம் பூச்சியமே ஆகிய பல பாடங்களை COVID-19 மக்களுக்கு மீட்டிக்கொடுத்துள்ளது. 

பணமிருந்தும் பொருளில்லை, பொருளாதாரம் இருந்தும் மீள வழியில்லை. மொத்தத்தில் உலகலாயுத பொருட்களால் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தில் நாம் சிக்கியுள்ளோம் என்பது தெளிவாக புரிந்துள்ளது.
ஓய்வே இல்லாத உழைப்பு, எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாத ஓட்டம், அவை அனைத்தையும் தாண்டி இப்போது குடும்பம் என்ற கூண்டுக்குள் இருக்கிறான் மனிதன். தாய்மையின் தியாகத்தை கண்கூடாக பார்க்கிறான்.

 " மனிதாபிமானம் " என்ற சொல்லின் உண்மைப்பொருள் உணரப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இத்தொற்று நோய் சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. சுத்தம் ஈமானின் பாதியாகும் என்ற கூற்று இஸ்லாத்தில் சுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இன்று அல்லாஹ் அதை ஒரு நுண்ணங்கி மூலம் எமக்கு நினைவூட்டியுள்ளான்.
இன்று இந்த வைரஸ்
இயந்திர உலகில் ஆரோக்கியம், சுத்தம் என்பவற்றை மதிக்காத மனிதனை சீர்ப்படுத்தியுள்ளது. 
 
மேலும் இன்று தாராளமாக ஓய்வு கிடைத்திருப்பதுடன் அதன் மூலம் உச்ச பயனையும், ஆரோக்கியத்தையும் அடைய வழியுருத்தி உள்ளது. குடும்ப புரிந்துணர்வு, கஷ்டங்களில் பங்கேற்றல், உதவிச் செயல்பாடுகளில் ஈடுபடுதல், மனிதநேயம், குழந்தைகள் மீது கவனம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பையும் மற்றும் சுகாதாரத்துறையின் தியாகத்தினையும், அர்ப்பணிப்பையும் உணர்த்தியுள்ளது. 

மேலும் பிரிட்டனின் 40,000 ற்கும் மேற்பட்டோரின் கருத்துக்கணிப்பிற்கு
ஏற்ப 9% ஆன மக்கள் மட்டுமே இக்காலப்பகுதியின் பின் பழைய வாழ்க்கைக்கு மீள விரும்புகின்றனர். ஏனையவர்கள் சுத்தமான காற்று, சமூக ஒற்றுமை, உணவின் மதிப்பு போன்றவற்றினை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இனம், மதம், மொழி கடந்து பாரபட்சமின்றி எத்தனையோ உயிர்கள் போய்விட்டன. பசிக்கும், பயத்திற்கும் நடுவே முழு உலகமும் பந்தாடிக்கொண்டிருக்கின்றது. வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. தற்காப்பே தலைக்காக்கும் என்ற எண்ணமும், எவர் கடவுள் என்ற வாதமும் மறந்து மனிதன் மத்தியில் பிரார்த்தனை மட்டுமே முழுசொத்தாய் மிஞ்சியுள்ளது. பல வடுக்கள் நிறைந்ததாக இந்நோய் இருப்பினும் எமக்கேயுரிய, இயல்பான மனித வாழ்க்கையில் எங்கோ தவறவிடப்பட்ட சுவடுகள், நாட்கள் பலவற்றை இதனூடாக மீட்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது உண்மையே. 

கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று நாளும் பொழுதும் வேடம் போட்டுக்கொண்டு வாழ்ந்த மனிதன் , வாழ்க்கை என்றால் என்ன?, குடும்பம் என்பது யாது?, பசி என்பதன் வரையறை என்ன?, உயிர்ப் பயம் என்றால் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ள கிடைத்த பொக்கிஷமான நாட்கள் இவை , இறைவனை மறந்து செயற்படும் பொழுதுகளில் அவனை நெருங்க வைக்கும் வாய்ப்புக்கள் தான் இவை. வாழ்க்கை சக்கரத்தின் ஒட்டுமொத்த அச்சாணியும் உயிர்தான். பணமோ, பொருளோ, சொத்துக்களோ, வேறு எதுவுமோ இல்லை என்ற உணர்மையை மனிதனுக்கு மிக இலகுவாக உணர்த்தியுள்ளது இந் நாட்கள் .

சர்வதேச புள்ளிகளும் , சாதாரணக் குடிமகனும் இயற்கையின் முன் சமமே என்பதை இந்நிலை நமக்கு உணர்த்தியுள்ளது . இன்று சட்டத்தை விலைக்கு வாங்கிய உலகம் உயிருக்கான போராட்டத்தில் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு உள்ளது .

கைத்தொழில் புரட்சியோடு ஓங்கிய மனித ஆதிக்கம் மெல்ல ஓய்வெடுப்பதற்கு COVID - 19 பெரும் பங்குதாரியாக இருக்கின்றது . கைத்தொழிலே ஆதாரம் என்று இருந்த உலகம் மெல்ல மெல்ல நிசப்தமாகி உள்ளது . சுவாசிக்கும் காற்றைக்கூட கொள்கலன்களில் சுமக்கும் அளவுக்கு தேய்வடைந்திருந்த சூழல் மெல்ல அதன் இயக்கத்தை இயற்கையோடு இணைத்துள்ளது . கற்பனையில் உறைந்திருந்த வசந்தம் அதன் இயக்கத்தை நிஜத்தில் பூமியில் பூவத் தொடங்கியுள்ளது . தூய காற்றும் , பசுமைப் புல்வெளிகளும் , பசிய மலர்களும் , உயிர்களின் சுதந்திர நடமாட்டமும் மீண்டுகொண்டிருக்கின்றன . 

படித்த பட்டம் , பதவிகள் , அந்தஸ்து அனைத்தையும் தாண்டி மனிதநேயம் , கருணை , மனிதாபிமானம் என்பனவே நிலையான வாழ்விற்கு வித்திட்டு வாழ்வை ஒருங்கிணைக்கும் பாலங்கள் என்பதை காலத்தின் வேகத்தால் மறந்திருந்த மனிதனை உணரவைத்துள்ளது .

இயந்திரம் போல வேலை செய்த மனிதன் இன்று யோசித்து வேலை செய்யும் நல்ல நிலை மாறியுள்ளது . கடமைக்கே என்று செய்த செயல்கள் எல்லாம் திட்டமிட்டு சிறப்பாக நேரம் செலவிடப்பட்டு திருப்தியுடன் செய்யப்படுகின்றன. இதற்கு உதாரணமாக நம் உணவு வேளைகளை எடுத்துக்கொள்ளலாம் . 

அதுமட்டும் இன்றி பல நட்புகளும் , உறவுகளும் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது . 

மேலும் சீனாவின் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது
இக்காலத்தில் உலகில் வளி மாசடைதல் 30 % இனால் குறைந்துள்ளதென்று . அதிக வலுவான செயற்கை ஒலிகள் எல்லாம் இல்லாமல் பறயைகள் , விலங்குகள் ஏன் மனிதன் கூட இயற்கையின் ஒலிக்கு செவிசாய்க்கின்றான் .
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்கி செயல்படுகின்றனர் . மக்கள் தமது அன்றாடத் தேவைக்காக வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கைகளை ஒரு போட்டி மனப்பாங்குடன் மேற்கொள்கின்றனர் . மேலும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுமுக்கியமாக விபத்துக்களினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளதுடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து கட்டுப்பட்டு புரிந்துணர்வுடன் வாழும் மனப்பாங்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய உலகம் நவீனமயப்படுத்தலுக்கு ஏற்ப மனிதப் பண்புகளும் நவீனமயப்படுடுள்ளது. அருகில் இருப்போரை எண்ணிப்பார்க்க நேரம் இல்லாத மனிதன், இறைவனின் அருட்கொடைகளை நினைக்க மறந்த மனிதன், நிலையான செல்வம் எது என்று அறியாத மனிதன், பணத்தின் பின்னால் ஓடிய மனிதன் என அனைவருக்கும் வாழ்வின் யதார்தத்தை உணர்தியுள்ளது இந் நாட்கள்.

எனவே மனிதன் எந்த ஒன்றையும் வடிவமைக்க முடியுமே தவிர உயிர் கொடுக்க முடியாது. கொரோனா நோய் அல்லாஹ்வின் ஏற்பாடு என்றால் அதற்கு நிவாரணம் தேடுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அல்லாஹ்வின் மற்றுமொரு ஏற்பாடாகும். 

ஆகவே மாற்றங்கள் முதலில் என்னில் இருந்து வரவேண்டும் என்ற உணர்வுடன் ஒவ்வொருவரும் செயற்பட்டு எல்லை மீறாத கட்டுக்கோப்பான வாழ்க்கையை நம்மில் இருந்தே தொடங்கி குடும்பம், சமூகம் என்று சீரான சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.
*"வழித்தடம்" 

- All University Muslim Student Association*
*Jaasira Junaideen*
*University of Colombo*
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -