கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் இதழில் ( journal of hospital infection) கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் ( Günter Kampf ) கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடிருக்கும்.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்தியோகமான சிகிச்சை முறை எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதே முக்கியமானதாகும்.

இந்த வைரஸ் கைகள் மூலமாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களிலிருந்தும் பரவக்கூடும் என கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -