பெரும்திரளான மக்கள் பங்கேற்புடன் அஷ்ஷெய்க் அன்ஸார் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்..!



அஸ்லம் எஸ்.மெளலானா-
காலம்சென்ற மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமாவின் உப தலைவரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மௌலானா அவர்களின் ஜனாஸா நேற்று இரவு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது பள்ளிவாசலும் மையவாடியும் நிறைந்ததாக பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உலமாக்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஜம்மியதுல் உலமாவின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து உயர்பீட உலமாக்கள் குழுவொன்றும் வருகை தந்து ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறே ஜாமியா நளீமியா கலாபீடத்தின் ராபிதத்துல் நளீமியா நிர்வாகக் குழுவினரும் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் ராபிதத்துல் நளீமியா பிரதிநிதிகள், அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா அவர்களின் சமய, சமூக மற்றும் கல்விப் பணிகள் சார்ந்த உன்னத சேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும், பள்ளிவாசல் சம்மேளனம் உட்பட பல சிவில் சமூக நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் அங்கு விநியோகிக்கப்பட்டன.

அதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய ஷூரா சபை, தேசிய முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்பினரும் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :