ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தையும் சிறுவர் தின விழாவும் கோலாகலம்!



சிறுவர்களின் வியாபாரத் திறன், சமூகப் பழக்கம் மற்றும் நடைமுறை அறிவை வளர்க்கும் சிறப்பான நிகழ்வு

சம்மாந்துறை – மின்மினி மின்ஹா-


சம்மாந்துறை ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர்  எம். எச். இஸ்ஸத் ழுபைராவின்  ஏற்பாட்டிலும், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் அதிபர் எம். எச். இஸ்ஸத் ஹுமைராவின்  தலைமையிலும் சிறுவர் சந்தையும் சிறுவர் தின நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர்களின் சமூக, பொருளாதார மற்றும் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அவர்களிடையே வியாபாரத் திறன், சமூகப் பழக்கம், தொடர்பாடல் திறன், பொறுப்புணர்வு மற்றும் நடைமுறை அறிவு போன்ற பல்வேறு ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

சிறுவர்களுக்கான மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தையில், பாலர்கள் தாங்களே விற்பனை நிலையங்களை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்ததுடன், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொண்டு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் மூலம் சிறுவர்கள் விளையாட்டின் ஊடாக வியாபாரம் மற்றும் சமூக வாழ்வின் அடிப்படை அம்சங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக மஜீத்புரம் மகா வித்தியாலய அதிபர் வை. பீ. இஸ்மாயீல் மற்றும் சம்மாந்துறை அரபா வித்தியாலய அதிபர் எம். ஐ. மஜீத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக இஹ்லாஸ் பாலர் பாடசாலையின் அதிபர் ஏ. சர்மிலா பானு மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் ஏ. எம். அனிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிறப்பு அதிதிகளாக சப்னா பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான எப். எப். ஜெஷீரா, எப். எப். இஸ்பா, ஏ. ஆர். எப். ஹப்னா, எம். எப். ஷீபா, ஏ. ஆர். எப். ஹனியா மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் மௌலவி ஏ. எல். அமீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், விசேட அதிதிகளாக கோரக்கர் பிரதேச உதயம் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான  எஸ். இராஜேஸ்வரி மற்றும்  என். சஜிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் சந்தையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், சிறுவர்களின் வியாபார நடவடிக்கைகளையும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்த சிறுவர் சந்தையில், பாலர்களின் பெற்றோர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர். தங்களது பிள்ளைகளின் விற்பனை நிலையங்களை அமைத்தல், பொருட்களைத் தயாரித்தல், விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் பெற்றோர்கள் இரவு பகலாக ஈடுபட்டு, நிகழ்வின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினர்.

மேலும், நிகழ்வுகளை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியதுடன், ஏனைய ஊடகச் செயற்பாடுகளிலும் ஏ. பீ. எம். இம்ரான் (ஜே.பி.), எம். ஜே. அன்சத், ஐ. எம். சப்னி மற்றும் ஏ. ஆர். அம்ஜத் ஆகியோர் சிறப்பான ஊடகப் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

சிறுவர்களின் கற்றல் – கற்பித்தல் ஆளுமையை மேம்படுத்துவதுடன், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர் குழாத்தினால் தரமான முன்பள்ளிக் கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்வியுடன் இணைந்த செயற்பாட்டு அனுபவங்கள் மூலம் சிறுவர்களின் ஆளுமை, சிந்தனைத்திறன், படைப்பாற்றல், சமூகத் திறன் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2027ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதி

2027ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதியைப் பெற விரும்பும் பெற்றோர்கள் 077 235 5752 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

சிறுவர்களின் எதிர்காலத்தை சிறப்பான அடித்தளத்துடன் கட்டியெழுப்பும் நோக்கில் கல்வியையும் செயற்பாட்டு அனுபவங்களையும் ஒருங்கிணைத்து வழங்கும் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் இம்முயற்சி, பெற்றோர் மற்றும் சமூகத்தினரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :