இந்தியா இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சர்வரூபானந்த ஜீ நிந்தவூர் முருகன் ஆலய விஜயம்!


வி.ரி. சகாதேவராஜா-


ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு விஜய மொன்றை நேற்று மேற்கொண்டார்.

அவரை ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் இராமலிங்கம் ரவீந்திரதேவன் பாதநமஸ்காரம் செய்து வரவேற்றார்.

சுவாமியுடன் ஆலயத் தலைவரின் இளைய சகோதரர் மருத்துவர் இராமலிங்கம் சகாதேவன் தம்பதியினரும் வருகை தந்தனர்.

சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் ஆலயத்தை தரிசித்து ஆசி வழங்கியதுடன் தலைவரின் மூத்த சகோதரர் இராமலிங்கம் வாமதேவனுடனும் கலந்துரையாடினார்.

அவர்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் நடராசா ரமேஷ் திருமதி வத்சலா ரமேஷ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :