கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
லர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இன்று(1) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் காலை இந்நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இச்சத்தியப்பிரமாண நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அதிதியாக பங்கேற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி , கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர்கள் , உப பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக ஊழியர்கள், கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நாட்டிற்காக உயிர் நீத்த அனைவருக்கும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :