இந்தப் பணியானது, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை பாலத்திலிருந்து ஆரம்பமாகி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தொண்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், காலை முதலே மழையையும் பொருட்படுத்தாது களப்பணியில் ஈடுபட்டு சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன் போது, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் காலை முதல் மாலை வரை களத்தில் இருந்து அவ்வப்போது தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி, பணிகளை நேரடியாக கண்காணித்தமை ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.
வேலைத்திட்டம் ஆரம்பிக்குமுன் சோகமாகவும் அசுத்தமாகவும் காணப்பட்ட தோணா, மாலை நேரம் ஆகும் போது புதுப்பொலிவு பெற்ற ஒரு அழகிய தோற்றத்தை எட்டியிருந்தது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள்,
“சாய்ந்தமருதின் அழகுக்கு மெருகூட்டவும், வெள்ள காலங்களில் பிரதான வடிகானாக பயன்படக்கூடிய இந்த தோணாவை, கடந்தகால ஆட்சியாளர்கள் மக்களுக்கான ஒரு பயனுள்ள வளமாக பார்க்கவில்லை. மாறாக, இதனை அவர்கள் பணம் சம்பாதிக்கும் இடமாகவே பயன்படுத்தினார்கள். இந்த தோணாவை அழகுபடுத்தி, ஊரின் பிரதான வடிகானாகவும், மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர்,“தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள், அரசாங்கத்தின் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தி, இந்த தோணாவை எழில்மிக்கதாக மாற்றி, சாய்ந்தமருதுக்கு வனப்பூட்டுவோம்” எனவும் உறுதியளித்தார்.
தோணாவை அண்டியுள்ள மக்களும் இதனை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், தோணாவுக்குள் கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தூரத்திலிருந்து கழிவுகளை கொண்டு வந்து இங்கு வீசுபவர்களைப் பற்றி அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இனிமேல் இந்தப் பிரதேசம் பொலிஸாரால் கண்காணிக்கப்படும் என்றும், தவறு இழைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் இந்த அர்ப்பணிப்பான செயற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டிய பிரதேசவாசிகள், தோணா சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாததால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்து, மக்களுக்கு நிரந்தர பயன் அளிக்கும் திட்டமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், சுத்தப்படுத்தப்பட்ட இந்தப் பிரதேசத்தை மக்களும் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு, கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவை தங்களது வாகனங்களை வழங்கியதாகவும், அதற்காக அந்த சபைகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அதேபோல், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நீர்ப்பாசன திணைக்களங்களும் வாகன உதவிகளை வழங்கியுள்ளதாகவும்,
ABS மற்றும் Pearl Construction ஆகிய தனியார் நிறுவனங்கள் வாகனங்களும் ஏனைய உதவிகளும் வழங்கியதாகவும், அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் எஸ்.எம். ஆரிப், பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் எல். நாசர், கல்முனை மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீன், பிராஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக்கினர்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment