கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!



கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா-
வுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை நேற்று (15) திங்கட்கிழமை வழங்கி வைத்தது.
இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் மனித அபிவிருத்தி தாபனத்தின் பிரதம இணைப்பாளருமான பொன்னையா ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது .

அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த மக்கள் அதற்கான நிதியை வழங்கி வைத்தார்கள்.
ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டத்தின் முதற்கட்டமாக ஏலவே பொலனறுவை கல்எல கிராமத்திற்கு முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை தெரிந்ததே.

ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதானியாக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார்.
ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன், வி.தஸானந்த், என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.
இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல சேவைகளை செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :