சோசியல் டிவியின் ஆளுமைகளை கௌரவிக்கும் விருது விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸுக்கு கெளரவம்!



லங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்த 55 சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விருது வழங்கும் விழா,

​இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப கேட்போர் கூடத்தில் டிசம்பர் 13ஆம் திகதி சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் என்.எம். சிறாஜ் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதியாக 24 படைப்பிரிவின் தலைமையக இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஜயவீர, விஷேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையை சேர்ந்த ஊடகம், இலக்கியம், தொழில் முயற்சி போன்ற பல்துறை ஆளுமைகள் 55 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மருதமுனைச் சேர்ந்த பன்நூலாசிரியர், சமூகப்பணியார், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், மருத நியூஸ் ஊடக வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் றாசிக் நபாயிஸ் அவர்களும் சோசியல் டிவியின் ஆளுமைகளை கௌரவிக்கும்" விருது விழாவில் Best Journalist Award-யை பிரதம அதிதி அவர்களின் கரங்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்,

கிழக்கு கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ், சம்மாந்துறை டெப் ஸ்டைல் நிறுவனத்தின் பணிப்பாளர், எஸ்.ஐ.எம். பிரோஸ் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.எச். காலித், ஏ.சி.எம். நயீம், ஏ.எல். ஹாத்திக் இப்ராஹிம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பெருந்திரளான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :