நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல மில்லியன் பெறுமதியான மேலும் ஒரு நிவாரணத் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்கும் நோக்கில் இந்த நிவாரண நடவடிக்கை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் கல்முனை வலயக் கல்வி பணிமனையால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மனிதாபிமானச் செயற்பாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பையும் உதவிக்கரங்களையும் வழங்கிய அனைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கூட்டு முயற்சிகள் சமூக ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :