ஆரம்ப அமர்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ. பௌசுல் அமீர் வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியின் நோக்கம், சமூகத் தலைவர்களின் முக்கியத்துவம் மற்றும் இன்றைய சூழலில் அனர்த்த முகாமைத்துவ அறிவின் அவசியம் குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் சிறப்புரையாற்றி, சமூக அடிப்படையிலான அனர்த்த அபாய முகாமைத்துவம் தொடர்பில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியம் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், இலங்கையில் வெள்ளம், சூறாவளி, வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தால் உருவாகும் அனர்த்தங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். அனர்த்த முகாமைத்துவம் என்பது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல; சமூக பங்கேற்பும், உள்ளூர் தலைமைத்துவமும் இன்றியமையாதவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனுபவங்களை எடுத்துரைத்த அவர், முன்கூட்டிய திட்டமிடல் இருந்தபோதும் தொடர்பு முறைகள் முற்றாக செயலிழந்ததே மிகப் பெரிய சவாலாக மாறியது என்றும், அனர்த்த காலங்களில் தகவல் பரிமாற்றம் தடைபடுவது உண்மையான அனர்த்தமாக அமையலாம் என்றும் தெரிவித்தார். மேலும், மாணவர்களை உடனடியாக வெளியேற்றுவது எப்போதும் பாதுகாப்பான தீர்வாக இருக்காது; நிலைமையை சரியாக மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அனர்த்த காலங்களில் உதவி மற்றும் தகவல்கள் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கிடைக்கலாம் என்றும், அவற்றை சரியான முறையில் மதிப்பிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதே உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வழி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அமர்வுகளில்,
சமூக அடிப்படையிலான அனர்த்த அபாய முகாமைத்துவம்,
சமூகப் பங்கேற்பின் அவசியம்,
சமூகத் தலைவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்,
அனர்த்த அபாயக் குறைப்பு (DRR) உத்திகள் – தடுப்பு, தணிப்பு, தயாரிப்பு,
அனர்த்த முகாமைத்துவ சுழற்சி – பதிலடி, மீட்பு, மறுகட்டமைப்பு,
மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் DRR நடைமுறைகள்
ஆகிய தலைப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. முகம்மட் றியாஸ், பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட விரிவுரையாளர். எம்.ஐ.எம். றினோஸ், பொறியாளர் துளசிதாசன், கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் ஆர். கிருபராஜா, இந்தியாவின் தமிழ்நாடு அனர்த்த முகாமைத்துவ துறையின் பணிப்பாளர் கலாநிதி கே. வாசுதேவன் உள்ளிட்டோர் துறைசார் உரைகளை நிகழ்த்தினர்.
கல்ஓயா நதியின் வெள்ள முகாமைத்துவ அமைப்பு,
தென்கிழக்கு பிராந்திய வெள்ள அபாயங்கள் – கடந்த அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட பாடங்கள்,
ஒலுவில் துறைமுகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கான புவியியல் தகவல் அடிப்படையிலான முன்-வெள்ள அபாய முகாமைத்துவ கட்டமைப்பு ஆகிய விடயங்களும் இங்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கலாநிதி ரீ. வாசந்தகுமரன், சென்னை தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி ஏ. முத்து கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்நிலை வழியாக கலந்து கொண்டு, புவியியல் தொழில்நுட்பம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
இங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. முகம்மட் றியாஸ், அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான பல முக்கிய விடையங்களை வெளிப்படுத்தினார்.
அவர் தனது உரையில், 2004 சுனாமிக்குப் பின்னர் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் Disaster Management Act (2005) அமுல்படுத்தப்பட்டதையும், அதில் Community Based Disaster Risk Management (சமூக அடிப்படையிலான அனர்த்த அபாய முகாமைத்துவம்) மிக முக்கிய அம்சமாக வலியுறுத்தப்பட்டிருப்பதையும் நினைவூட்டினார். அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக கிராம மற்றும் சமூக மட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் என அவர் கூறினார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் Disaster Management Centre, National Disaster Relief Services, Meteorology Department மற்றும் NBRO ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். தற்போது இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன என்றும், Early Warning System (முன்னறிவிப்பு எச்சரிக்கை) தொடர்பான குறைபாடுகள் இருந்தாலும், காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவை தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தயார்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அவர் குறிப்பாக வலியுறுத்திய விடயம், Last Mile Dissemination – அதாவது எச்சரிக்கை தகவல்கள் கடைசி நபர் வரை சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதாகும். தகவல் வழங்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், அதை மக்கள் பின்பற்றும் மனப்பாங்கு (attitude) மிக முக்கியம் எனவும், எச்சரிக்கைகளை புறக்கணிப்பது உயிர் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒலுவில் மற்றும் கல்லோயா ஆற்றுப் பகுதிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அபாய நிலை அறிவிக்கப்பட்ட போதும் இடம்பெயர மறுக்கும் மக்களின் நிலை குறித்து அவர் கவலை வெளியிட்டார். அனர்த்த முகாமைத்துவத்தில் மனித நடத்தை மாற்றம் இல்லையெனில் எந்தத் திட்டமும் வெற்றியடையாது என்பதே அவரது முக்கியக் கருத்தாக இருந்தது.
மேலும், மின்சாரம் மற்றும் தொடர்பு முறைகள் செயலிழக்கும் சூழ்நிலையில் பயன்படுத்துவதற்காக Satellite Phone, Radio Communication (VHF/HF) போன்ற மாற்று தொடர்பு அமைப்புகள் அவசியம் என்பதையும், அவற்றை பராமரிப்பதற்கு நிதி மிக முக்கிய தடையாக இருப்பதையும் அவர் விளக்கினார்.
அவரது உரையின் முக்கிய பரிந்துரையாக,
Hazard Mapping, Risk Mapping ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடல்
Simulation Exercises மற்றும் Mock Drills ஆகியவற்றை காலாண்டுக்கு ஒரு முறை கட்டாயமாக நடத்தல்
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் Comprehensive Disaster Safety Plan நடைமுறைப்படுத்தல்
பழைய மற்றும் அபாயகரமான கட்டடங்களை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது
என்ற விடயங்களை அவர் வலியுறுத்தினார்.
“Natural Disaster” என நாம் அழைப்பவை பெரும்பாலும் மனித செயற்பாடுகளால் உருவாகும் அபாயங்களே எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சேதம் தொடர்பில் ஒவ்வொருவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே அனர்த்த அபாயங்களை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் ஏற்பாட்டாளரும் Research Centre – Technology for Disaster Prevention and Management (RC-TDPM) பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான எம்.ஐ.எம். கலீல் இங்கு கருத்து வெளியிட்டபோது எதிர்காலத்தில் இந்நிகழ்வில் பங்குகொண்டுள்ள அனைவரயும் இணைத்துக்கொண்டு பாரிய அமைப்பாக செயற்பட்டு அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
இங்கு அனர்த்தம் உருவக (Simulation) நடைமுறைப் பயிற்சி நடத்தப்பட்டு, அவசர நிலைகளில் சமூகத் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நேரடி அனுபவம் வழங்கப்பட்டது.
மேலும், “அனர்த்த முகாமைத்துவத்தில் இளைஞர்கள் – ஒரு வளமாக” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டு, இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், சிரேஷ்ட பேராசிரியர்எம்.ஐ.எம். கலீல் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட “Conclusion and Way Forward” எனும் குழு கலந்துரையாடலில், எதிர்கால நடவடிக்கைகள், செயல் திட்டமிடல் மற்றும் சமூகத் தளத்தில் செயல்படுத்த வேண்டிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்ச்சி நிறைவில், பங்குபற்றுனர்களுக்கு சான்றிழல்களும் வழங்கப்பட்டதுடன் துறைசார் சேத மதிப்பீடு – ‘Ditwah’ வெப்ப மண்டல சூறாவளி (புவியியல் அணுகுமுறை) குறித்து விளக்கப்பட்டு, இறுதியாக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹரினால் முடிவுரை நிகழ்த்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமூகத் தலைவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவையும், தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளையும் வழங்கி, எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்ளும் சமூகத் திறனை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

.jpg)
0 comments :
Post a Comment