ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய தலைமைத்துவ நிர்வாக சபை தெரிவு.



ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 12வது தலைமைத்துவ நிர்வாக சபை பொதுக்கூட்டம் 12.12.2025 அன்று கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அமைப்பு விரிவாக்கம் மற்றும் மக்கள் சேவைப் பணிகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி, கட்சியின் புதிய தலைவராக முஸ்னத் முபாறக் தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக இர்பான் முஹிதீன், பொருளாளராக ஏ.எம்.ஏ. அத்னான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், அவைத் தலைவர் (சேர்மன்) பதவிக்கு முஹம்மத் முஜாஹித், உதவி அவைத் தலைவராக அஹமத் ரஷாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் உப தலைவர்களாக எம். முர்ஷித், ஆர். சசி குமார், எம். ஸாஹித், எம்.எஸ்.எம். சதீக், எம்.எஸ்.எம். றஸீன் காரி மற்றும் ருஷ்தி நாசிர்ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

உதவி பொருளாளராக எம். பைசல், தேசிய அமைப்பாளராக ஏ.எம்.ஏ. சமாம், ஊடகப் பேச்சாளராக முபாறக் முப்தி ஆகியோரும் புதிய நிர்வாகத்தில் இடம்பிடித்தனர்.

மகளிர் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மகளிர் விவகார இணைப்பாளர்களாக திருமதி ஹனான், பாத்திமா சிஹாமா, பாத்திமா பர்வின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேவேளை, பெண்கள் விவகார இணை இணைப்பாளர்களாக புஷ்பகாந்த நிஷாந்தி மற்றும் S. பத்மாவதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், மேலதிக செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.எம். றபீக், ஏ.எல்.எம். அன்சார் (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்), எம்.ஆர்.எம். மரீர், ஜெனீட்டா குமார், ஏ.எம். ஸக்கீ, எஸ். எல். ரியாஸ், ஏ.எம்.ஏ. சஹ்ரன், ஜெஸ்மின் மௌலவி ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், புதிய நிர்வாக சபை கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்தி, தேசிய அரசியலில் மக்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி செயற்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :