அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்ற "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி



ல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(16) கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது .

நடனத்துறையில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த செல்விகள் எம். சசீனா, கே.யசோமிதா, கே.லோஜிகா, என் அரணிகா, யு .சம்ருதி ஆகியோர் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

பக்கவாத்தியங்களில் நட்டுவாங்கம் ஜி.ஹரன் வாய்ப்பாட்டு எஸ். நரேந்திரா , ஏ.கல்யாண்சரண், மிருதங்கம் . எஸ்.லோவிகரன், வயலின் எஸ்.தனுஸ்கரன், புல்லாங்குழல் ஆர். சேதுமாதவன் ஆகியோர் துணை கலைஞர்களாக செயற்பட்டனர்.

நிகழ்வில் கணபதி கீர்த்தனம், புஷ்பாஞ்சலி, கந்த அலாரிப்பூ ,ஜதீஸ்வரம், வர்ணம், பதம் கீர்த்தனம் ,தில்லானா, மங்கலம் ஆகிய கண்கவர் நடனங்கள் மேடை ஏறின.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு, ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
அழைப்பு அதிதிகளாக கல்முனை திருக்கோவில் வலய நடன ஆசிரிய ஆலோசகர்களான றீசா பத்திரம் மற்றும் திருமதி தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறப்பானதொரு நடனவிருந்தை அனைவரும் கண்டு களித்தனர்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :