காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு கள பரிசோதனை



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு மேற்பார்வை மற்றும் சிரமதான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த களப்பணிகள் இடம்பெற்று வருகிறது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் டெங்கு மேற்பார்வை செய்யப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

டெங்கு மரணம் ஒன்று இடம் பெறுவதாக இருந்தால் அதற்கு சுகாதாரத் தரப்பும் பொதுமக்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த இரு தரப்பினரதும் ஒத்துழைப்பு இல்லாத போதே டெங்கு மரணம் நிகழ்கிறது. எனவே எமது காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீடு வீடாக சென்று டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம். டெங்கு நோய் பரவுவதற்கான சூழல்கள் அடையாளங்கள் காணும் இடத்து உரிய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் பொது இடங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சூழலை இல்லாமல் செய்யும் சிரமதான பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு நோயை உருவாக்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கான விசேட திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சமூகத்தில் உள்ள மத ஸ்தலங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக சேவை நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறான அமைப்புகள் கடந்த காலங்களில் எமக்கு பாரிய அளவிலான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் எமக்கு கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தநிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கள உதவியாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :