ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீமின் எண்ணக்கருவில் வாழ்நாள் சாதனையாளர் கெளரவிப்பும் விருதும் (பெண்களுக்கான விருது கௌரிவிப்பு)
ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீமின் எண்ணக்கருவில் "வாழ்நாள் சாதனையாளர் கௌரவிப்பும் விருது வழங்கல்" நிகழ்வும் தவிசாளர் நழீம் தலைமையில் இன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான செய்யித் அலிஷாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளர், ஏறாவூர் நகர சபை, உறுப்பினர்கள் S.M.ஜப்பார், U.L.சுலைஹா, M.S.A.கபூர், A.M.சப்றா, R.சதீஸ்குமார், K.இஸ்மத் இப்திக்கார் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையினுடைய உறுப்பினர்களான சஜித், மாஹிர், ராவி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்துறைசார் நிபுணர்கள், கலைஞர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :