நாம் வாழும் புனித பூமி எமது தாய், "சுத்தம் சுகநலம் தரும் " எனும் தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவின் விபுலானந்தர் வீதியில் அமைந்திருக்கும் சமாதான முன்பள்ளி பாடசாலையில் (10) இடம்பெற்றது.
மாளிகைக்காடு FBY - இளைஞர் கழகத்தினை அடையாளப்படுத்தி, வெகு சிறப்பாக இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வு, பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம். பரீட்டின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஜே. எம். ஜூதாப்பின் தலைமையிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மனித உதவி அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ. ரியால், கிராம உத்தியோகத்தர் எ.எ. நஜீம், ஆலோசகராக எஸ்.ஏ.எம். அஸ்லம், முன்பள்ளியினுடைய ஆலோசகர் எம். முகைதீன் மற்றும் கழகத்தினுடைய உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் முன்பள்ளி ஆசிரியர்களும் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment