சிறுவர் துஷ்பிரயோகம் / சிறுவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்..!



எ.றொஸான் முஹம்மட்-
மூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் தரம் 6, 7, 8 கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான சிறப்பு கருத்தரங்கு 12/06/2022 கல்முனை ஸ்டார் தனியார் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டில் தீவிரமடையும் சிறுவர் வன்கொடுமையை தடுக்கும் வகையில் சிறுவர்களை பாதுகாக்கும் வேலைத் திட்டத்தினை மேற்படி அமைப்பு ஆரம்பித்துள்ளது. அமைப்பின் தலைவர் எ.றொஸான் முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் கருத்தரங்கில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான அஸ்லம் றுஸ்லி, சாகிர் அஹ்மத் மற்றும் ஸ்டார் கல்லூரியின் முகாமையாளர் முஹம்மட் ஸஹ்மி ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

மேற்படி அமைப்பானது மாணவர் சமுதாய நல வேலைத்திட்டங்கள், ஏழைகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு உதவித் திட்டங்கள், இடர்கால நிவாரண உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல வேலை திட்டங்களை செய்து வருகின்ற ஒரு தொண்டுசார் சமூக சேவை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :