புகையிரத வண்டியில் மோதி பெண்ணொருவர் மரணமடைந்துள்ள சம்பவமொன்று நேற்றிரவு (20) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியில் சந்திவெளி பகுதியில் வைத்து பெண்ணொருவர் மோதி மரணித்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்துள்ள பெண் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், அப் பெண் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரணமடைந்த பெண்ணின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் விபத்தா? தற்கொலையா? எனும் கோணத்தில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment